Saturday, February 24, 2007

கலிங்கம் - தொடர்கதை(பாகம்-1)

நான் குரு. எங்க‌ப்பா அடிக்கடி சொல்வார் கனவு காணாதே-னு.. எங்க சார் அடிக்கடி சொல்வார் பேப்பர்ல கதை எழுதாதேனு.. ஆனா எனக்கு கனவு காணவும் கதை எழுதவும் நிரம்ப பிடிக்கும்.(என்னடா Mani Ratnam assitant range-க்கு பேசுறான் நினைக்கிறீங்களா.. அதான் குரு!)
சரி கதைக்கு வர்றேன்..
ந‌ம்ம‌ க‌தையின் நாய‌க‌ன் ஒரு ப‌டையின் த‌ள‌ப‌தி.
இட‌ம்: இந்திய சீன எல்லை(இமைய‌ம‌லையின் அடிவார‌ம்)
பெய‌ர்: சால்யன்
த‌குதி: ம‌ற்ப்போர்,விற்ப்போர்,குதிரை யேற்ற‌ம்,...
ப‌த‌வி: த‌லைமை த‌ள‌ப‌தி
கால‌ம்: கி.பி 12ம் நுற்றாண்டு

முன் கதைச் சுருக்கம்:-
கலிங்க நாட்டிற்கும்,நேபாள நாட்டிற்கும் நீண்ட நாள் பகை.இருவரும் சமபலம் கொண்டவர்கள்.அதனால் இருவரும் சரியான சந்தர்ப்பத்தை எதிர் நேக்கி காத்திருந்தார்கள்.இரு நாட்டுப் படை எந்த நேரத்திலும் தயார் நிலையிலேயே இருக்கும்.இதனால் இரு நாட்டின் வாணிபம்,வளர்ச்சி போன்றவை பாதிப்புக்குள்ளானது.இந்த சூழ்நிலையில் கலிங்க நாட்டின் அரசவை கூடியது.இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் ஒன்று,நேபாள நாட்டிற்கு நட்பின் முறை தூது அனுப்புவதென்று முடிவுசெய்யப்பட்டு அதை மந்திரி சாரங்கன் நிறைவேற்றினார்.

நேபாள மன்னன் யுவான் சென் தூதை ஏற்று தன் மகன் மியான் சென்-ஐ நட்பின் நிமித்தமாக கலிங்க நாட்டிற்கு அனுப்பிவைத்தார்.மியான் சென் கலிங்க நாட்டில் பல விருந்து,கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான்.இந்த சூழ் நிலையில் மியான் சென்னிற்கும்,இளவரசி நந்தினி தேவிக்கும் காதல் மலர்ந்தது.வளர்ந்தது. நாட்கள் கடந்தது.மியான் சென் தன் நாட்டிற்கு புறப்படும் பொழுது இளவரசியிடம் ஒரு ஓலையை கொடுத்துவிட்டு சென்றான்.

சில நாட்கள் கழித்து,இளவரசி மியான் சென்-ஐ காண கிளம்பினாள்.அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தளபதி சால்யன் இளவரசியின் செயலைக் கண்டு அதிர்ந்து,போக வேண்டாமென்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.அனால் இளவரசி கேட்காமல் சென்றுவிட்டாள்.இனி.....

Friday, February 23, 2007

சங்கே முழங்கு

வானம் ஒன்ரென்று
வாழ்ந்திடும் கூட்டம்
மண்னை பிரிப்பதில்
ஏன் இந்த நாட்டம்?

வானும் மண்ணும்
அனைவருக்கும் சொந்தம்-என
‌முழங்கிட
பிறந்தது வேதம்;
மனிதனை பிரித்து
மண்னை ஆள
நினைத்ததில்
பிறந்தது திவிரவாதம்

வதம் செய்து
வாதம் வளர்த்திட‌
உயிர் என்ன‌
யாகப் பொருளா ?

நரல் தின்னும்
கூர்மம் கூட‌
இனம் காக்கும்
தர்மம் கொண்டது
குணம் கொண்ட
‌மனிதன்தான்
பணத்திற்காக‌
தாயை விற்கும்
கயவன் ஆனான்

பிண‌ம் தின்னும்
ஓநாய் கூட்ட‌ம்
ம‌னித‌னாய் ஜ‌னித்த‌து எப்போது?
அற‌நெறி போற்றிடும்
நாட்டிலே இன‌வெறி
தோன்றிய‌து எப்போது?

மத‌ம் கொண்ட யானையை
அழிப்ப‌த‌ற்கு
அர‌க்க‌ குண‌ம் தேவையில்லை
பூக்க‌ள் ம‌ல‌ரும்
நந்த‌வ‌ன‌த்தில்
துப்பாக்கி க்கு வேலையில்லை
த‌வ‌ம் செய்து பெற்ற
வாழ்வை-தீ திங்க
‌கேட்ப‌தற்கு நாதி இல்லை

ஆதாய‌ம் ஆகாய‌மாய்
ஆன‌த‌ன் விளைவா-இல்லை
இதை அட‌க்க
திராணிய‌ற்று போய் இருக்கும்
ந‌ம் அர‌சா-இல்லை
உல்லாச‌மே வாழ்க்கை -என
‌வாழும் ந‌ம் ம‌க்க‌ளா?

ஏன் இந்த பிரிவினை வாத‌ம்?
என்று அழியும் இந்த திவிர‌வாத‌ம் ?
பொறுத்த‌து போதும்
நாச‌ம் செய்யும் வேர்க‌ளை
அறுத்தெறிந்து
பூக்க‌ள் ம‌ல‌ர‌ப்
போர்தொடுப்போம்

சங்கே முழங்கு






Sunday, February 18, 2007

என்ன‌ தவம் செய்தாய்

ஏன் என்று கேட்கிறேன்
பதில் சொல்வாயா அம்மா?
அன்புக்கு தெய்வம் நீ
பாசத்தின் விளைநிலம் நீ-பின்
ஏன் அம்மா?
கருவாய் பத்தரை மாதம் சுமந்தாய்
பிறையாய் பிறந்த போது உன்
நித்திரையின்றி காப்பாயே-பின்
ஏன் அம்மா?
காற்றும் என்னை சீண்டாது பார்பாயே‍
உன் மூச்சுக் காற்றையே எனக்கு சுவாசமாக கொடுப்பாயே-பின்
ஏன் அம்மா?
ஏத்தனை தவம் செய்தாய்
நான் பிறக்க‌
ஏத்தனை இடர் சுமந்தாய்
நான் பிறக்க
உன் செந்நீர் எல்லாம் கண்ணீரான போதும்
என்னை பெற்றாயே-பின்
ஏன் அம்மா?
தொப்புள் கொடி உதிரும் முன்
நம் உறவு அருந்ததென்ன
தாலாட்டைத் தானே கேட்டேன்
உன்தாயாதிமார்கள் பாடியது என்ன?
தாய்ப்பால் அல்லவா கேட்டேன்
க‌ள்ளிப்பால் கொடுத்த‌தென்ன‌
பெண்ணாய் பிற‌ந்த‌து
என் பிழையா?
பெண்ணை பெற்ற‌து
உன் பிழையா?
யாரோ செய்த பிழைக்கு
என்னை க‌ளைந்த‌தென்ன‌?
சிலையாய் நின்று கேட்கிறேன்
பதில் சொல்வாயா அம்மா?



Saturday, February 10, 2007

அழகிய தமிழ் மகள்

ஆ‌ட்ட‌மா பாட்டமா
ஆடித்தான் பார்போமா
ஆடியோ பாடியோ
இன்ப‌த்தை சேர்போம் வா

முத்தங்கள் கேட்கிறேன்
க‌ட‌னாக‌ கொடுப்பாயா
வ‌ட்டியோடு குட்டியும்
சேர்த்தே நான் த‌ருகிறேன் வா

ச‌ம்ம‌தம் சொல்லடி
ச‌ரித்திர‌ம் செய்வோமே
ச‌முத்திர‌ம் நீலம் தான்
காதல் செய்வோமே

உல‌க‌ப் போர் முடிந்தால் என்ன
முத்தப் போர் புரிவோமா
உல‌க‌மே அதிரும்படி
யுத்தத்தை தொடர்வோமா

ப‌கலே இல்லாத‌
புது உல‌குக்கு போவோமா
அவ‌காச‌ம் இல்லாம‌ல் - புது
இதிகாச‌ம் செய்வோமா

வெண்ணிலா நீய‌டி
ம‌ண்ணிலே தான‌டி-னு
க‌விதை சொல்லித்தான்
காதல் செய்யவா

காயிலே தேனடி
க‌ண்ட‌வ‌ன் நான‌டி-னு
பொய்க‌ள் சொல்லித்தான்
காத‌ல் செய்யவா

அக‌நாணூறைப் ப‌டித்து
காதல் ஆராய்ச்சி செய்வோம் வா
காம‌த்துப் பால் குடித்து
மன்ம‌த லீலையை வெல்வோம் வா

Artic முத‌ல்
Atlantic வ‌ரை
நாம் காத‌ல் ப‌ய‌ண‌ம்
செய்வோமே

வாடிப்ப‌ட்டி முத‌ல்
Vatican வ‌ரை
நாம் காத‌ல் முத்திரை
ப‌திப்போ
மே

Tuesday, February 6, 2007

"குரு"-வின் "ஆட்டோகிராப்"...

சேரன் மட்டும் தான் ஆட்டோகிராப் படம் எடுக்கலாமா? - அப்படின்னு மனசுக்குல என்னோட ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த "குரு"-வின் "ஆட்டோகிராப்"...

Note - படிச்சதுக்கு அப்பறம் ஒங்க மனசு ரெம்ப கனமானா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

என் முதல் ஆட்டோகிராப்..
IV std-ல ஆரம்பிக்குது...
என்னங்க அப்டி பாக்ரீங்க...
அப்போ என்னய தூத்துக்குடில ஒரு ஸ்கூல்ல சேத்துவிட்டாங்க..
ரெம்ப அமைதியா போவேன்..இல்லேனா அப்பா டின் கட்டீருவாரு..
ரெண்டாவது பென்ச்ல ஒரு பொண்ணு பக்கத்துல ஒக்காரவச்சாங்க டீச்சர் (நல்ல டீச்சர்).
இப்பொ பஸ்-ல பக்கத்துல நிக்க கூட விடமாடேங்ராங்கபா..
நாங்க ரெண்டு பேரும் தான் கொலு கொலுனு இருப்போம் எங்க class-லயே (இப்போ கொலு கொலு னு இருந்தா தடிமாடு மாதிரி இருக்கனு கேலிபண்றாங்க...என்ன உலகம் டா இது)

ஒரு நாள் அந்த பொண்ண எதோ சொல்லிட்டான் ஒரு பையன் (வில்லன்).. அதுக்கு நான் அவன அடிக்க போய் (ஹீரொயிஸம்) என் பல்ல அவன் ஒடச்சுட்டான்...
அப்போ இருந்து அந்த பொண்ணு என்னய பாத்தா சிரிக்கும்..நான் என்னய பாத்துதான் சிரிக்குதானு confirm செஞ்சிட்டு லேசா சிரிச்சு வைப்பேன்.
இதுல சோகம் என்னனு கேட்டீங்னா..
என்னய V std வேற ஸ்கூல்-ல சேத்துடாங்க..
இப்பவும் அவ சிரிப்பு என் மனசுக்குல அப்படியே பதிஞ்சுடுச்சு -கல்வெட்டு மாதிரி!

அடுத்த ஆட்டோகிராப் தொடரும்...

Sunday, January 28, 2007

என் அருகில் நீ இருந்தால்..

உயிர் கொடுத்து எனை செய்தாய் தாயே
நான் வளர உரமானாய் நீயே
என்னை பார்க்க கண் மலர்ந்தாய் நீயே – மீண்டும்
உன் வயிற்றில் பிறக்க தவம் செய்வேன் நானே

உயிரொடு உடல் வளர உரம் மட்டும் போதும் – நல்
அறத்தோடு நான் வளர உன்னை போல தாய் வேண்டும்
உன் கனவும் உன் ஆசையும் பாலாய் என்னில் தந்தாய்
நான் வளர என் கண்ணில் நீ கனவு கண்டாய்

அடிகொரு முறை என் உச்சி முகர்ந்தாய்
அரை மணி கூட பிரியாது என் அருகில் நீ இருந்தாய்
ஒற்றை உயிராய் நீ மட்டும் தானே இருந்தாய் – பின்
ஏனம்மா என்னை நீ விற்றாய்?

Thursday, January 25, 2007

கரிசகாட்டு பூவே..

ஏ புள்ள..எங்கடி இருக்க?
உடமாட்டு வண்டியில
ஒரு மாட்ட பூட்டிகிட்டு
உன்னை பார்க்க வந்தேனே

ஒத்தையடி பாதையில
ஒரு முழம் பூவோட
உனக்காக நின்னேனே
சுட்டெரிக்கும் வெயிலிலே

சுள்ளி பொருக்க போகயிலே
கூடு விட்டு போகுதடி என் உசிரு
உன்னை
கூத்து கட்ட துடிக்குதடி என் மனசு

சொந்தமுன்னு வந்துபுட்ட
சொத்துசொகம் வேணாம்புள்ள
சீல துணி வாங்கியாரேன்
சிங்காரிக்க வேணாம்புள்ள

சீவி முடிஞ்ச தலையில
ஒத்த பூவ வச்சுகிட்டு
மஞ்சள் முடிஞ்ச மஞ்ச கயிர
கட்டிகிட்டா போதுமடி

இரை தேடி போனவுக
கூடு தேடி வாரக
புல் மேய போனவுக
ஊடு தேடி போராக

சுள்ளி பொருக்க போன புள்ள
உன்னை மட்டும் காணோமடி
கூட வந்த பொம்பளைக
கூட்டு சேர்ந்து போரக

ஒத்தையிலே நின்ன என்னை
ஓர பார்வை பார்த்துபுட்டு
கூட்டுகாரி ஒருத்திகிட்ட
பொரணி பேசி சிரிக்குராக

போனவுக மொத்ததில
ஒன்ன மட்டும் காநோமடி
தட்டி விட்ட மாட்டபோல
என் மனசு ஓடுதடி

தறி கெட்ட ஒட்டத்தில
என் மனசு கரையுதடி
எட்டு மொளம் சீல கட்டு
கை இறுக்க ரவிக்கை போட்டு
கெண்ட காலு தெரிய
ஒத்தையில வாரவலே

அயிர மீனு கண்ணுகுள்ள
அரை டஜன் ஆசை
கருவேலன் காட்டுகுள்ள
உன் காலடி ஓசை
கூடு சேர்ந்த பறவையெல்லாம்
கூடி நின்னு பார்க்குதடி
ஒய்யாரி இவ நடந்து வர
நிலவும் எட்டி பார்க்குதடி
பொட்டபுள்ள உன்கிட்ட
அப்படிஎன்ன சேதி இருக்குகுதடி?

வெக்கம் ஒரு கண்ணுகுள்ளே
ஆசை ஒரு கண்ணுகுள்ளே
ஒரு சேர என்னை பார்த்துபுட்ட
கூட வந்த பொம்பளைய
முன்னாடி அனுப்பிவிட்டு
வேணுமுன்னே என்னை காக்க வச்ச

வாடிபட்டி,அரசம்பட்டி முறை
முனாச்சிபட்டி,மூலகரைபட்டி வரை
வேரகுலம் சாத்தன்குலம் முதல்
நாக குலம்,தெக்கன்குலம்னு
பொண்ணுக என்னை தேடி வர
சிந்தாமணி நீ மட்டும்- எனக்கு
சீதனமா வாயெண்டி

பார்த்த கண்ணு மாறாம
பூத உடல் நோகாம
சுள்ளி கட்டு தலையோட
என் சமீபம் வந்தேயே

பார்த்த பொண்ணா இருந்தாலும்
பார்வை புதுசா இருக்குதடி
உன்னையும் என்னையும் தவிர மத்ததெல்லாம்
மாயமா மறந்து போனதடி..