Sunday, February 18, 2007

என்ன‌ தவம் செய்தாய்

ஏன் என்று கேட்கிறேன்
பதில் சொல்வாயா அம்மா?
அன்புக்கு தெய்வம் நீ
பாசத்தின் விளைநிலம் நீ-பின்
ஏன் அம்மா?
கருவாய் பத்தரை மாதம் சுமந்தாய்
பிறையாய் பிறந்த போது உன்
நித்திரையின்றி காப்பாயே-பின்
ஏன் அம்மா?
காற்றும் என்னை சீண்டாது பார்பாயே‍
உன் மூச்சுக் காற்றையே எனக்கு சுவாசமாக கொடுப்பாயே-பின்
ஏன் அம்மா?
ஏத்தனை தவம் செய்தாய்
நான் பிறக்க‌
ஏத்தனை இடர் சுமந்தாய்
நான் பிறக்க
உன் செந்நீர் எல்லாம் கண்ணீரான போதும்
என்னை பெற்றாயே-பின்
ஏன் அம்மா?
தொப்புள் கொடி உதிரும் முன்
நம் உறவு அருந்ததென்ன
தாலாட்டைத் தானே கேட்டேன்
உன்தாயாதிமார்கள் பாடியது என்ன?
தாய்ப்பால் அல்லவா கேட்டேன்
க‌ள்ளிப்பால் கொடுத்த‌தென்ன‌
பெண்ணாய் பிற‌ந்த‌து
என் பிழையா?
பெண்ணை பெற்ற‌து
உன் பிழையா?
யாரோ செய்த பிழைக்கு
என்னை க‌ளைந்த‌தென்ன‌?
சிலையாய் நின்று கேட்கிறேன்
பதில் சொல்வாயா அம்மா?



2 comments:

Anonymous said...

gurusri, kavidhai laan superungooo..
inum edhavadhu vidhyasama try panungalaen..
- Divya

gurusri said...

Thx.sure neraiya ideas iruku.
kandipa implement pannuvaen.i need ur comment and support.