Friday, February 23, 2007

சங்கே முழங்கு

வானம் ஒன்ரென்று
வாழ்ந்திடும் கூட்டம்
மண்னை பிரிப்பதில்
ஏன் இந்த நாட்டம்?

வானும் மண்ணும்
அனைவருக்கும் சொந்தம்-என
‌முழங்கிட
பிறந்தது வேதம்;
மனிதனை பிரித்து
மண்னை ஆள
நினைத்ததில்
பிறந்தது திவிரவாதம்

வதம் செய்து
வாதம் வளர்த்திட‌
உயிர் என்ன‌
யாகப் பொருளா ?

நரல் தின்னும்
கூர்மம் கூட‌
இனம் காக்கும்
தர்மம் கொண்டது
குணம் கொண்ட
‌மனிதன்தான்
பணத்திற்காக‌
தாயை விற்கும்
கயவன் ஆனான்

பிண‌ம் தின்னும்
ஓநாய் கூட்ட‌ம்
ம‌னித‌னாய் ஜ‌னித்த‌து எப்போது?
அற‌நெறி போற்றிடும்
நாட்டிலே இன‌வெறி
தோன்றிய‌து எப்போது?

மத‌ம் கொண்ட யானையை
அழிப்ப‌த‌ற்கு
அர‌க்க‌ குண‌ம் தேவையில்லை
பூக்க‌ள் ம‌ல‌ரும்
நந்த‌வ‌ன‌த்தில்
துப்பாக்கி க்கு வேலையில்லை
த‌வ‌ம் செய்து பெற்ற
வாழ்வை-தீ திங்க
‌கேட்ப‌தற்கு நாதி இல்லை

ஆதாய‌ம் ஆகாய‌மாய்
ஆன‌த‌ன் விளைவா-இல்லை
இதை அட‌க்க
திராணிய‌ற்று போய் இருக்கும்
ந‌ம் அர‌சா-இல்லை
உல்லாச‌மே வாழ்க்கை -என
‌வாழும் ந‌ம் ம‌க்க‌ளா?

ஏன் இந்த பிரிவினை வாத‌ம்?
என்று அழியும் இந்த திவிர‌வாத‌ம் ?
பொறுத்த‌து போதும்
நாச‌ம் செய்யும் வேர்க‌ளை
அறுத்தெறிந்து
பூக்க‌ள் ம‌ல‌ர‌ப்
போர்தொடுப்போம்

சங்கே முழங்கு






No comments: